கடற்கரையில் கிடந்த சூட்கேஸ் : பணம் இருக்கும் என்று எண்ணி திறந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

843

அமெரிக்காவில் இளைஞர் பட்டாளம் ஒன்று கடற்கரையில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதைக் கண்டு அவற்றில் பணம் இருக்கலாம் என்று எண்ணி திறந்து பார்த்துள்ளனர்.

டிக் டாக்கில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், இளம்பெண் ஒருவர் கடற்கரையில் கிடக்கும் அந்த சூட்கேசுக்குள் பணம் இருக்கலாம் என்று கூறியபடி அதை திறக்க முயல்வதைக் காணமுடிகிறது.

அந்த சூட்கேசிலிருந்து கடுமையாக நா ற்றம் வீச, பிறகுதான் தெரிந்துள்ளது, அதற்குள் இருந்தது ம னித உ டல் பா கங்கள் என்று. உடனே, அவருடன் இருந்த மற்றொரு இளம்பெண் பொலிசாருக்கு போன் செய்கிறார்.

விரைந்து வந்த பொலிசார் அந்த இடத்தை சோ தனை செய்ய, சற்று தொலைவில் மற்றொரு சூட்கேசிலும் உ டல் பா கங்கள் கிடப்பது தெரியவந்துள்ளது. அவை யாருடையவை, எப்படி அங்கு வந்தன என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.


வெளியிடப்பட்டுள்ள டிக் டாக் வீடியோ ஒன்றில், இளம்பெண்களும் இளைஞர்களுமாக ஜாலியாக சிரித்தவண்ணம் அந்த சூட்கேசை ஆராய்வதையும் வீடியோ எடுப்பதையும் காண முடிகிறது.

பின்னர் அந்த சூட்கேசுக்குள் உடல் பாகங்கள் கிடப்பது தெரியவந்ததும், மூக்கைப் பிடித்தபடி அவர்கள் திணறுவதையும் பொலிசாரை அழைப்பதையும், பொலிஸ் வாகனம் ஒன்று சைரனை ஒலிக்கவிட்டபடி வருவதையும் காணமுடிகிறது.