கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய ‘தல’ அஜித்.. வெளியான மரண மாஸ் செய்தி…!

1055

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி விடுகின்றனர்.

பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அதிகரித்து வரும் ஒரு கொரோனாவால் சென்னை உட்பட சில பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக காட்சி தருகின்றன.


இந்நிலையில் அதிரடியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தல அஜித் கொரோனாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

தனது DHAKSHA அணியினருடன் டிரோன்கள் மூலம் சிவப்பு மண்டலங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அவர் பயிற்றுவிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இக்கட்டான நேரத்தில் இறங்கி உதவி செய்யும் நடிகர் அஜித்தின் இந்த செயல் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.