சுற்றுலா மக்களை கவர முழு நகரமே ஊதா நிறமாக மாற்றிய சம்பவம்.. வியந்துபோன மக்கள்!

330

தென்கொரியாவில்…

உலகில் நடக்கும் அனைத்து விதமான விஷயங்களையும், இணையத்தில் மூலமாகவும், ஊடக மூலகமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் கண்டிருப்போம்.

அப்படி, ஒரு நகரமே ஊதா நிறத்தில் ஜொலித்த சம்பவம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

தென்கொரியா நாட்டில் உள்ள பண்வோல் (Banwol) மற்றும் பக்ஜி (Bakji) உள்ளிட்ட தீவுகள் முழுமையாக ஊதா நிறத்திற்கு மாறியுள்ளது.


மேலும், இந்த பகுதியில் பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில், ஊதா நிறத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து சுற்றுலாவிற்காக பலரும் வருகின்றனர்.

சுற்றுலாவிற்காக வரும் சிறுவர்களையும், பெரியவர்களையும் அப்பகுதியினர் மிகுந்த அரவணைப்போடு வரவேற்று பார்த்துக்கொள்கின்றனர்.

இதனால், இந்த தீவை மக்கள் அதிகம் கவனிப்பதற்கு ஊர் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளை ஊதா நிறத்தில் மாற்றியுள்ளனர் என கூறியுள்ளனர்.