பாம்பு பிடிப்பவரின் கண்ணை பதம் பார்த்த மலைப்பாம்பு: ஒரு திடுக் வீடியோ காட்சி!!

467

பாம்பு பிடிப்பவர்…….

பாம்பு பிடிப்பவர் ஒருவரின் கண்ணை மலைப்பாம்பு ஒன்று ஆக்ரோஷமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான Nick Bishop (32) என்பவர் ப்ளோரிடாவில் மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்துள்ளார்.

தான் பிடித்த பாம்பைக் குறித்து வீடியோவில் உற்சாகமாக விளக்கிக்கொண்டிருக்கும் Bishopஐ, அவரது கையிலிருக்கும் அந்த பாம்பு எப்படியாவது கடித்துவிட முயற்சிக்கிறது.

கேஸுவலாக, என் கையை சுவைக்க அது முயற்சிக்கிறது என்று கூறிக்கொண்டிருந்த Bishopஐ, சட்டென எதிர்பாராமல் முகத்தில் தாக்குகிறது அந்த பாம்பு. அது முகத்தில் தாக்கிய வேகத்தில் பாம்பையே விட்டுவிடுகிறார் Bishop.


பின்னர் அவர் முகத்தை குளோசப்பில் காட்ட, அவரது கண்ணிமைக்கு மேல் அந்த பாம்பு கடித்திருப்பதையும், அந்த காயத்திலிருந்து இரத்தம் பீறிடுவதையும் காணலாம். ஆனால், இதை தான் எதிர்பார்க்கவில்லை என்று அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக கூறும் Bishop, பாம்புகள் மனிதர்களை தாக்குவதற்காக தங்கள் பொன்னான சக்தியை வீணாக்குவதில்லை என்கிறார்.

அவை இரை பிடிப்பதற்காகவும், எப்படியாவது பிழைக்கவேண்டும் என்பதற்காகவும்தான் தங்கள் சக்தியை செலவிடும் என்கிறார் அவர்.

பொதுவாக பாம்புகள் மனிதர்களை தாக்கும், துரத்தும் என எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால், அது உண்மையில்லை. ஒவ்வொரு முறை நான் பாம்பிடம் கடிபட்டதும், பாம்பு தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியின்போதுதான் என்கிறார் அவர்.