சாதரண மருத்துவ பரிசோதனைக்கு சென்ற இளைஞர்! X-ray-வில் காத்திருந்த அதிர்ச்சி!!

349

எக்ஸ் ரே………….

பிலிப்பைன்சில் சுரங்க வேலையில் சேர்வதற்காக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற இளைஞர், எக்ஸ் ரே செய்து பார்த்த போது, அவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் பிலிப்பைன்சின் Kidapawan நகரில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, Kent Ryan Tomao என்ற 36 வயது நபர் கத்தி காயத்தால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர்.

அதன் பின் வழக்கம் போல் இருந்த Kent Ryan Tomao சுரங்க வேலை ஒன்றில் சேர்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த சான்றிதழ் வேண்டும் என்று அங்கு கேட்டுள்ளனர்.


இதனால், அவர் மருத்துவபரிசோதனைக்காக அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது விலா எலும்புக் கூண்டுக்கு அருகிலும், நுரையீரலை துளைப்பதில் ஒரு அங்குலம் இடைவெளி விட்ட நிலையில், கூர்மையான கத்தி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர் அந்த கத்தியை உடலில் இருந்து அகற்றும் வரை, சுரங்க வேலைக்கு செல்ல முடியாது. அப்போது ஏற்பட்ட காயத்தை மருத்துவர்கள் சரியாக பார்க்காததால், இப்போது அதன் உண்மை தெரியவந்துள்ளது.

இது குறித்து அந்த நபர் கூறுகையில், குளிர்ச்சி காலங்களில் என்னுடைய மார்பில் வலி ஏற்படும். ஆனால் அது அந்தளவிற்கு பெரிதாக இருக்காது. நான் வலி நின்றவுடன் மீண்டும் பழைய படி வேலை செய்ய துவங்கிவிடுவேன்.

இதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இப்போது அதன் உண்மையான பிரச்சனை என்பதை அறிந்து கொண்டேன். எனக்கு கடந்த ஆண்டு சிகிச்சையளித்து மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க எந்த திட்டமும் இல்லை. உடல் நிலை சரியாகினால் போதும், அப்போது தான் நான் வேலைக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதற்கான சிகிச்சைக்காக அவர் முறையாக அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.