தமிழர்களின் கொடூரமான மரணம்… நீதி வேண்டும்: ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள்!!

1054

தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றி கேள்வி பட்டு கண்கலங்கி விட்டேன் என்று இந்திய வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் பொலிசார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பின் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர்

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதனைக் கண்டித்தன.


காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் பெருமளவில் டிரண்டாகி வருகிறது. தற்போது இது தொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷிகர் தவணும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன். நாம் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று மற்றொரு வீரரான ஹர்பஜன் சிங், படிப்பவனுக்குத் தேவை ஆயுதம். வலிப்பவருக்குத் தேவை காரணம்.

இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம் என்று தெரியாமல் இறந்து விட்டார்கள், அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே என்று குறிப்பிட்டுள்ளார்.