இன்றைய ராசிபலன் (20-04-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

536

இன்றைய ராசிபலன்………………..

மேஷம்

மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

ரிஷபம்


ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.உத்தி யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

துலாம்

துலாம்: அனுபவ பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள் .விஐபிகள் அறிமுகமாவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி அடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

மீனம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். தைரியமுடன் செயல்படவேண்டிய நாள்.