கொரோனா தீவிரத்தால் பிரித்தானியாவில் ஒருபகுதி மேலும் 2 வாரங்களுக்கு முடக்கம்!

936

கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. இங்கிலாந்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும், தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வரும் 4-ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளன. இதனால் விதிமுறைகள் பறக்கவிடப்பட்டு கொரோனா பரவல் மேலும் தீவிரமாகும் என அரசு அச்சம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு தளர்வு கூடாது என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


இதையடுத்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜூலை 4-ல்தான் தளர்வுகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை வெல்ல வேண்டும். கொரோனா என்னைத் தாக்காது என்று இளைஞர்கள் சிலர் நினைக்கலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் உங்கள் மூலம் முதியவர்களை தாக்கலாம். கொரோனா இன்னும் வெளியில்தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பகுதி மேலும் இரண்டு வாரங்களுக்கு ஏனைய பகுதிகளை விட கடுமையான கட்டுப்பாடுகளோடு முடக்கப்படும் என எதிர்கொள்ளப்படுகிறது.