இளவரசி டயானா இப்போது உயிருடன் இருந்திருந்தால்… ஒரு கலைஞரின் கற்பனை!!

697

இளவரசி டயானா…

இளவரசி டயானா உ.யி.ரு.டன் இருந்திருந்தால் இப்போது ராஜ குடும்பம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையை ஓவியங்களாக்கியிருக்கிறார் ஒரு கலைஞர். மக்களின் இளவரசி என்று அழைக்கப்படும் இளவரசி டயானாவின் இ.ற.ப்பு இன்னமும் அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொ.ள்.ள முடியாத ஒன்று.

அப்படியிருக்கும் நிலையில், இன்று அவர் உ.யி.ருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? எப்போதும் சேர்ந்தே இருக்கும் வில்லியமும் ஹரியும் இப்போதும் தாயுடன் போஸ் கொடுத்திருப்பார்கள், என்ன, கூடவே அவர்களது மனைவிகளும் இருந்திருப்பார்கள்.

குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம் டயானாவுக்கு, அப்படியிருக்கும்போது, வில்லியமுடைய பிள்ளைகள் மூவர் மற்றும் தன் செல்ல மகன் ஹரியின் மகன் ஆர்ச்சி என குழந்தைகள் பட்டாளம் சூழ ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கும்.


சமீபத்தில் வந்துபோன தாய்மார் தினத்திற்கு, டயானாவும், கேட்டும், கர்ப்பிணியான மேகனும் இணைந்து ஒரு போஸ் கொடுத்திருப்பார்கள்.

தன் செல்ல மகன் ஹரிக்கு ஒரு குழந்தை பிறந்தபோது, நீயே ஒரு குழந்தை, உனக்கு ஒரு குழந்தையா என கண்களில் ஆச்சரியம் காட்டி, அந்தப்பக்கம் மேகனுடன் அவரது தாய் டோரியா நிற்க, இந்தப்பக்கம் ஹரியுடன் தான் நின்று ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கும்.

இப்படியெல்லாம் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற ரசிகர்களின் எண்ணங்களை ஓவியமாக்கி, கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் Autumn Ying என்ற ஓவியர்.