மணமேடையில் சரிந்து விழுந்த அழகிய மணப்பெண்! பல கனவுகளுடன் இருந்த மணமகனுக்கு பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!!

1017

 

இந்தியாவில் திருமண மேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்த மணப்பெண் பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கும் வினிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்த நிலையில் நேற்று முன் தினம் திருமண நிகழ்வு நடைபெற்றது.

மண மேடையில் மணமகன் மற்றும் மண்ப்பெண் உட்கார்ந்திருந்த நிலையில் திருமண சடங்குகள் நடந்து வந்தன.

அப்போது திடீரென மேடையில் சுருண்டு விழுந்தார் வினிதா. இதை பார்த்த மணமகன் சஞ்சய் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.


உடனடியாக வினிதாவை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரவு முழுவதும் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது.

ஆனால் அவரை காப்பாற்றமுடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு வினிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கண் எதிரிலேயே வினிதா உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சய் கதறி அழுதார்.

இதனிடையில் வினிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்ததாக தெரியவந்தது.

கடந்த ஆறு மாதங்களாகவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

வினிதாவின் உடல் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்ட நிலையில் அனைவரும் கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.