தாகத்திற்காக தண்ணீர் குடிக்க வந்த குரங்கை.. தூக்கில் தொங்க விட்ட மிருகங்கள்…!

442

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவரது வீட்டிலுள்ள குடிநீர் தொட்டியில் நீர் அருந்த வந்த குரங்கு ஒன்று, தொட்டிக்குள்ளேயே தவறி விழுந்து தத்தளித்துள்ளது. இதனை பார்த்த வெங்கடேஸ்வர ராவ் அதனை காப்பாற்றுவதற்கு பதில், தூக்கு மாட்டி தொங்கவிட்டுள்ளான்.

துடிதுடித்தபடி தொங்கிய குரங்கை அங்கிருந்த நாய்களும் கடித்து குதறியுள்ளன. தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்த குரங்கின் உடலை நாய்களுக்கு உணவாக வீசியெறிந்துள்ளான் அந்த கொடூரன்.

குரங்குகள் முன்பு இவ்வாறு ஒரு குரங்கை கொன்றால், மற்ற குரங்குகள் பயந்து வீட்டிற்கு வராது என பக்கத்து வீட்டுக்காரர் கூறியதைக் கேட்டு இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.


இந்த கொடூர சம்பவம் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலனதை தொடர்ந்து அப்பகுதி போலீஸார் வெங்கடேஸ்வர ராவ் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.