5000 ரூபா கொடுப்பனவு மே மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!!

1337

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

இதன்படி நாளைய தினம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதேவேளை, ஒய்வூதிக்கொடுப்பனவும் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.