இளம் தம்பதியை வீட்டு வேலைக்காக வைத்த கோடீஸ்வரர் : வெளியூருக்கு சென்று வீடு திரும்பியவர் கண்ட அதிர்ச்சி காட்சி!!

492

இளம் தம்பதியை..

இந்தியாவில் கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்த இளம்தம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவர் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். குர்மீத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஹரி சிங், குரஷனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குர்மித் தனது மனைவி குழந்தைகளுடன் டெஹரடூனுக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் ஹரி சிங், குரஷன், நேபாளத்தை சேர்ந்த பணியாளர்களான இளம் தம்பதி மற்றும் மேலும் 4 பணியாளர்கள் இருந்தனர்.


அந்த சமயத்தில் நேற்று முன் தினம் அந்த இளம் தம்பதி வீட்டில் இருந்த அனைவருக்கும் இரவு உணவை 7.30 மணிக்கு கொடுத்தனர். அதை சாப்பிட்ட 6 பேரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்கள்.

பின்னர் அந்த தம்பதி வீட்டில் இருந்த லட்சக்கணக்கான பணம், நகைகளை கொள்ளையடித்து கொண்டு ஓடிவிட்டனர். அடுத்தநாள் காலையில் வெளியூர் சென்ற குர்மித் வீடு திரும்பிய போது அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பொலிசார் வந்து அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின் குணமானார்கள்.

தற்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியை பொலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

அவர்கள் சிக்கிய பின்னர் இந்த சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.