குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் : அடுத்த சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்!!

379

தினேஷ்,அஸ்வின்…

கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முகையூர் அடுத்துள்ள கிராமம் கொடுங்கால். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் லாரி ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.

இவரது மகன்கள் தினேஷ் குமார்(12) மற்றும் அவரது தம்பி அஸ்வின் குமார்(10) ஆகிய இருவரும், இன்று காலை அவர்களது விவசாய நிலத்தின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.


நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததை அடுத்து ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது குள்த்தின் கரையோரம் குழந்தைகள் இருவரும் இருவரது துணிகள் இருந்துள்ளது.

இதில் சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் குளத்தில் இறங்கி தேடியுள்ளனர். அப்போது நீரில் தினேஷ் குமார் முதலில் சிக்கி உள்ளார். பின்னர் மேற்கொண்டு தேடும்போது அஸ்வின்குமார் என்பவரது உடலும் சிக்கி உள்ளது.

பின்னர் இது குறித்து அரகண்டநல்லூர் போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்தப் போலிசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளின் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.