மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு : நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி!!

606

நிவேதிதா..

இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் நிவேதிதா விளையாடி கொண்டிருந்த போது அவர் தந்தை ராஜேஷ் மிச்சர் வாங்கி வந்தார்.

அதை நிவேதிதா சாப்பிட்டார், அப்போது அதில் இருந்த கடலை நிவேதிதா தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சு விடமுடியாமல் தவித்தார். இதையடுத்து பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.


இது குறித்து ராஜேஷ் கூறுகையில், நிவேதிதா மூச்சு விட சிரமப்பட்ட போது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். வழியில் கண் திறந்து தனது தாயை பார்த்தார்.

பின்னர் அவளுடைய தாய் அவளிடம் கிண்டர் ஜாயை வாங்குவதாக சொன்னாள். அப்போது நிவேதிதா தலையாட்டினாள். அதற்குள் அவள் கண்ணை மூடி சரிந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார். உயிரிழந்த நிவேதிதாவின் உடல் வீட்டு வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.