6300 அடி உயரத்தில் ஊஞ்சல் ஆடிய இரண்டு பெண்கள்: அடுத்து நடந்த விபரீதம்! வைரல் வீடியோ..

317

தாகெஸ்தானில்…

6300 அடி அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிய இரண்டு பெண்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள சுலக் கனியன் மீது 6300 அடி உயரமுள்ள குன்றிலிருந்து இரண்டு பெண்கள் ஊஞ்சலில் ஆடி வந்துள்ளனர்.

அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்துகொள்ள, நபர் ஒருவர் 6300 அடி அந்தரத்தில் அந்த பெண்கள் அமர்ந்திருக்கும் ஊஞ்சலைஆட்டிவிடுகிறார்.


இதையடுத்து, என்ன நடக்குமோ என பார்பவர்களுக்கே திகில் தலைகேரும் நிலையில், அப்போது அந்த ஊஞ்சல் கம்பி அறுந்து, இரண்டு பெண்களும் மலை உச்சியில் இருந்து கீழே விழுகின்றனர்.

என்ன ஆனது என அனைவரும் அவர்களை கண்டு மீட்டபோது, 2 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறிய கீறல்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இது சம்மந்தமாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.