பழிக்குப் பழி வாங்குவோம்! சீனா பகிரங்க மிரட்டல்!!

985

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,

பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது.

சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை நெரிப்பதாக பிரித்தானியா குற்றம் சாட்டிய சில மணி நேரத்திற்குள்,


லண்டனிலுள்ள சீன தூதரகம், ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள அழைப்பு சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என குறிப்பிட்டதோடு,

இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும், தக்க பதில் நடவடிக்கை எடுப்போம் என்றும்பிரித்தானியாவை மிரட்டியுள்ளது.