பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்: வெளியான காரணம்!!

551

கமலக்கண்ணன்….

சென்னை கடற்கரை சாலையிலுள்ள நேப்பியர் பாலத்தில் மதியம் 12 மணியளவில் நடந்து வந்த ஒரு நபர் திடீரென பாலத்தின் மேலிருந்து கூவம் ஆற்றில் குதித்துள்ளர்.

மேலிருந்து கீழே குதித்த நபர் கூவம் ஆற்றின் சேற்றில் சிக்கி தவிப்பதை பார்த்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர், மீட்புப் பணிக்காக திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினரை உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.


சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை காவல்துறையினர் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணையில் நேப்பியர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர் ராயபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்(37) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் வயிற்றில் கட்டியுடன் பல நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

நோய் தாக்கத்தின் வலியினால் இவர் த.ற்.கொ.லை செ.ய்ய முயற்சி செய்து நேப்பியர் பாலத்தின் மேலிருந்து கீழே குதித்து த.ற்.கொ.லை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.