கணவருடன் சேர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஜெனிலியா.. குவியும் ரசிகர்களின் வாழ்த்து..!

1022

தமிழில் பாய்ஸ் திரைப்படத்த்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா டிசோசா. குறும்புத்தனமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர்.

அதைத்தொடர்ந்து, விஜயுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன், மீண்டும் விஜய்யுடன் வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து, பாலிவுட்டில் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டு விலகினார் ஜெனிலியா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொது ரித்தேஷ் தேஸ்முக், அவரது மனைவி ஜெனிலியா இருவரும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.


இது குறித்து ஜெனிலியா அவருடைய சமூக வலைத் தளத்தில், நீண்ட நாட்களாகவே நானும் கணவரும் உடல் உறுப்பு தானம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு நேரம் அமையாமல் இருந்தது. மருத்துவர் தினத்தில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக முடிவுசெய்து வாக்குறுதி கொடுத்து இருக்கிறோம். அடுத்தவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு வாழ்க்கை பரிசுதான்.


மற்ற உயிர்களைக் காப்பாற்ற இது போல் நீங்களும் உங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் என கேண்டுகொண்டுள்ளார்.

இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.