ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடு: என்ன காரணம் தெரியுமா? வைரலாகும் வீடியோ!!

510

ஆட்டு கடா…

அயர்லாந்தில் ஆட்டு கடா ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

அயர்லாந்தின் Co Donegal-வில் உள்ள Ballybofey-வில் வசித்து வரும் Richard Thompson என்ற விவசாயி வளர்த்து வந்த அந்த Suffolk வகை கடாவே இந்த விலைக்கு போயுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த விலையை Richard Thompson முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் அவரின் வாழ்க்கையே தலைகீழாக மாறியுள்ளது.


ஏழு மாத குட்டியான இது 44,000 யூரோவுக்கு (மதிப்பில் 1,03,89,596 கோடி ரூபாய்) கடந்த திங்கட் கிழமை Blessington Mart in Co Wicklow-விற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட போது, இந்த விலைக்கு விலை போயுள்ளது. இதுவே அயர்லாந்தில் ஒரு கடாவிற்கு அதிகபட்சமாக செலுத்தபட்ட மிகப் பெரிய தொகை என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு அயர்லாந்தில் ஒரு கடாவிற்கு 38000 யூரோ கொடுத்து வாங்கப்பட்டதே மிகப் பெரிய தொகையாக இருந்தது. Richard Thompson இது குறித்து கூறுகையில், நல்ல விலைக்கு விற்கப்படும் என்று தெரியும்.

ஆனால் இந்த அளவிற்கு அது விலை போகும் என்று நினைத்து பார்க்கவில்லை. இது போன்ற விஷயங்கள் எல்லாம் வாழ்வில் ஒரு முறை தான் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கு அயர்லாந்தில் உள்ள கொலரைனைச் சேர்ந்த விவசாயி டென்னிஸ் டெய்லர் தலைமையிலான கூட்டமைப்பே இந்த விலையை செலுத்தியுள்ளது.

இந்த பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இதை பலரும் தேடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் இதை வைத்து இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று, இந்த பணம் அப்படியே நேரடியாக பண்ணையில் கொடுக்கப்படும் என்று Richard Thompson கூறினார்.