அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் சகோதரருடன் நடைப்பயிற்சி : இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

418

கேரளாவில்..

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் நகரில் பத்து மாடி குடியிருப்பின் மாடியில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கொச்சின் நகரில் அமைந்துள்ள பத்து மாடி குடியிருப்பின் எட்டாவது மாடியிலேயே தோட்டக்காட்டு எஸ்டேட் உரிமையாளர் ராய் என்பவரது குடும்பம் சமீபத்தில் குடியேறியுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தின் போது ராய் என்பவது மகள் 18 வயதேயான ஐரின் ராய் என்பவர் தமது சகோதரருடன் மாடியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


அப்போது எட்டாவது மாடியின் வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது தவறி விழுந்த ஐரின், அங்கிருந்து கார் நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது விழுந்து, பின்னர் சுவரில் மோதி, அங்கிருந்து தரையில் விழுந்துள்ளார்.

அலறித்துடித்த உறவினர்கள், உடனடியாக எர்ணாகுளம் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

சாலக்குடி பகுதியை சேர்ந்த ராய் குடும்பம் கடந்த ஜனவரி மாதத்திலேயே கொச்சின் நகரில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.