வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி ஒன்றை செயலளிக்க செய்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பெண் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயங்களுக்கு உள்ளான பெண் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கலோரெஸட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளரான குடும்ப பெண் ஒருவரே மேற்படி சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.