செலவே இல்லாமல் தலைவலி, தலைபாரம், கழுத்து வலியை போக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்!!

1396

ஒரு பைசா கூட செலவில்லாமல் அருமையான ஒரு பாட்டி வைத்தியத்தை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இதை படித்த உடனே நிச்சயமாக அசந்து போய் விடுவீர்கள். பலருக்கு தற்போது நாள் முழுவதும் கணினி முன்பு உட்கார்ந்து பார்க்கும் வேலை இருப்பதால் கழுத்து வலியினால் அவதிப்படுவார்கள்.

மேலும் ஒரு சிலருக்கு தலையில் நீர்கோத்து தலை பாரம், எந்நேரமும் மூக்கில் நீர் வடிதல், சளி, ஜலதோஷம் ஆகிய பிரச்சனைகள் இருக்கும். இவர்கள் அனைவருக்கும் இந்த பாட்டி வைத்தியமானது ஒரு அற்புதமான தீர்வினை உடனடியாக தருகிறது. இதனை செய்வதற்கு மண்ணால் ஆன ஒரு தோசை கல்லை எடுத்து கொள்ளுங்கள்.

உங்களிடம் தோசை கல் இல்லையெனில் மண்ணால் ஆன அகல் விளக்கு அல்லது குழம்பு வைக்கும் மண் சட்டியை கூட பயன்படுத்தி கொள்ளலாம். இதனை அடுப்பில் அதிகப்படியான தீயில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு சூடு செய்து கொள்ளவும். மண் பாத்திரம் சூடேறியதும் அதன் மீது ஒரு காட்டன் துணியை குண்டாக உருட்டி அதன் மீது வைக்கவும்.


உங்களால் பொறுக்கும் அளவுக்கு சூடு ஏறிய பின்பு வலி இருக்கும் இடத்தில் அந்த துணியை வைத்து ஒத்தடம் கொடுங்கள். மூட்டு வலியாக இருந்தால் மூட்டு பகுதியிலும், தலைவலி என்றால் தலையிலும் அல்லது தலைபாரம் என்றால் நெஞ்சு பகுதியிலும் இந்த ஒத்தடத்தை கொடுக்கவும்.

இந்த சூடு உங்கள் உடலில் ஏறும் போது உடலில் உள்ள கெட்ட எல்லா வெளியேறி வியர்க்க ஆரம்பிக்கும். மண்ணால் ஆன பொருட்களில் இருந்து கிடைக்கும் சூட்டிற்கு அத்தனை மருத்துவ பயன்கள் உண்டு. வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரக்கூடிய அற்புதமான ஒரு மருத்துவம் இது.

இதனை தொடர்ந்து மூன்று முறை செய்யும் போது நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். தலையில் நீர்கோத்து இருந்தாலும் அந்த நீர் அனைத்தும் வெளியேறி விடும். மேலும் அதனால் உண்டாகும் தலைவலியும் சரியாகி விடும். இது மட்டும் இல்லாமல் இதனை செய்து முடித்த பின் ரிலாக்ஸாக உணர்ந்து ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.