பேன் ஒரு பெரும் தொல்லைதான். தலை முடியில், அடி வயிற்றில் வசித்துக் கொண்டு மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அருவருப்பான புல்லுருவி. சமூகத்தில் பலர் முன்னிலையில் தலையை சொறிய வைக்கும் பேன், ஒரு சிறிய, இறக்கையில்லாத பூச்சி.
கண்ணுக்கு சரிவர தெரியாத சிறு உருவமாக இருந்தாலும், மனித ரோமங்களையும், ஆடையையும் நன்றாக கெட்டியாக பிடித்துக் கொள்ளும் பலமுடைய கொக்கிகள் உள்ள கால்கள் கொண்டது.
ட்டையான, உருவத்துடன் வறண்ட தோலும் உள்ளதால் பேனை நசுக்குவது கடினம். ரத்தத்தை உறிஞ்சுவதற்காக அமைக்கப்பட்ட வாய்கள் உடையது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுலபமாக பரவும். குறுக்காக 3 மி.மீ. அளவு இருக்கும். மனித ரத்தத்தை உறிஞ்சி வாழும்.
பேன் மனிதர்கள் மூலம் பரவும் ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல்கள் மூலமாகவும், அவர் பக்கத்தில் தூங்குவதாலும் எளிதில் பரவக் கூடியது.
இது இரத்தத்தை உறிஞ்சுவது மட்டுமின்றி அரிப்பால் தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடையச் செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும்.பேன்கள் அதிக அளவு உற்பத்தியாகும் தன்மை கொண்டதால் இதனை எளிய முறையில் அகற்றுவது தான் சிறந்தது.
அந்தவகையில் பேன் தொல்லையில் இருந்து விடுபட 1 தடவை இது மாதிரி செய்தால் உங்கள் தலையில் உள்ள பேன் நிமிடத்தில் செத்துவிடும் கீழே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக தெரிந்து பேன் தொல்லையிலிருந்து விடுபடுங்கள்.