திருமணமான 3வது நாளில் தந்தையை கணவர் வீட்டுக்கு வர சொன்ன புதுப்பெண்! லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்த வரிகளை கண்டு அதிர்ச்சி!!

1164

இந்தியாவில் திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் சரண் தாஸ். இவர் மகன் சச்சின் சைனி.

இவருக்கும் நேஹா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்தநாள் கணவர் வீட்டுக்கு நேஹா வந்தார்.

இந்த நிலையில் திருமணமான மூன்றாவது நாள் நேஹா தனது கணவர் மற்றும் மாமனாரிடம், தனக்கு கால் வலிக்கிறது என கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.


பின்னர் தனது தந்தைக்கு போன் செய்து உடனடியாக வருமாறு நேஹா கூறினார். இதையடுத்து மகளுக்கு எதாவது பிரச்சனையா என்ற பதற்றத்தில் நேஹா தந்தை அங்கு வந்தார். அப்போது கதவை உள்பக்கமாக நேஹா பூட்டியிருந்த நிலையில், கதவை எப்படியோ உடைத்து பார்த்தார்.

அங்கு நேஹா தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அவர் தந்தை அதிர்ந்ததோடு அறையில் உள்ள டிரஸ்ஸிங் டேபிளில் லிப்ஸ்டிக்கால், என் குடும்பத்தாரிடம் எதுவும் கூறவில்லை என எழுதப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு நேஹா சடலத்தை கைப்பற்றினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்தேகத்தின் பேரில் நேஹாவின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.