தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றவாளி விடுதலை… கோபத்தில் குடும்பத்தார்!

936

தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த குற்றவாளி பாதி தண்டனைக்குப் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தகவல், அந்த பெண்ணின் பெற்றோரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Anni Dewani (28) தன் கணவர் Shrien Dewani (40)உடன் தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்றிருந்தபோது வழிமறித்த இருவர் அவரைக் கடத்தி சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக Anni பயணித்த காரின் சாரதியான Zola Tongo (39), மற்றும் கடத்தல்காரர்கள் Mngeni மற்றும் Qwabe என்னும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் மூவரும் Anniயின் கணவர்தான் அவரைக் கொல்வதற்கு தங்களுக்கு பணம் கொடுத்ததாக கூறிவிட்டனர். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் கிடைக்காததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் Shrien. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கையோடு ஒரு ஆண் நண்பரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் ஓரினச்சேர்கையாளரான Shrien. சாரதி Tongoவுக்கு 18 ஆண்டுகளும், Mngeni மற்றும் Qwabeக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.


Mngeni சிறையிலேயே மூளைப்புற்றுநோயால் இறந்துபோனார். இந்நிலையில், 18 ஆண்டுகள் தண்டனை பெற்ற Tongo, நன்னடத்தை காரணமாக சிறையிலிருந்து பாதி தண்டனைக்காலத்திலேயே விடுவிக்கப்பட இருக்கிறார். இம்மாதம் (ஜூலை) 28ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட இருப்பதை அறிந்து Anniயின் குடும்பத்தார் கடும் கோபம் அடைந்துள்ளனர். Anniயின் தந்தையான Vinod Hindicha (71), இந்த செய்தி தன்னை வெறுப்படையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த Tongo மிருகம், தனது மனைவி குழந்தைகளுடன் வாழப்போகிறது, ஆனால் எங்கள் மகள் எங்களுக்கு மீண்டும் கிடைப்பாரா என கதறுகிறார் அவர். அவர் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறியிருக்கும் நிலையில், அதனால் பயனில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். தென்னாப்பிரிக்க சட்டம் அப்படிப்பட்டது, மேல் முறையீடு செய்தாலும் Tongo விடுதலையாவதை தடுக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.