கேரள மாநிலம்…
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிரியை மாதவி (வயது 47). இவர் அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரியை மாதவி ஆன்லைன் மூலம் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது அவருக்கு இருமல் வந்துள்ளது.
அப்போது நான் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் கேமராவை ஆன் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். மாணவர்கள் கேமராவை ஆன் செய்ததும் அவர்களிடம் பேசியுள்ளார்.
அனைவருக்கும் வீட்டுப்பாடம் கொடுத்துவிட்டு எனக்கு உடல்நிலை சரியில்லை. அடுத்த வகுப்பில் பார்க்கலாம் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அவரது உறவினருக்கு போன் செய்து உடல்நலம் சரியில்லை வீட்டுக்கு வாருங்கள் எனக் கூறியுள்ளார்.
அவரது உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஆசிரியை தரையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தன் மாணவர்களை கடைசியாக பார்த்துவிட்டு ஆசிரியை உயிரிழந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.