வேறு ஜாதி பெண்ணுடன் காதல்… பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்த காதலன்! அதன் பின் நடந்த விபரீதம்!!!

1017

தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(23). கொத்தனராக வேலை செய்து வரும் இவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் கண்டிப்பாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்துள்ளனர். அதே போன்று இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 பேருமே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, கடந்த திங்கட் கிழமை மகேந்திரன் தன் காதலியை ராஜபாளையம் புது பஸ் ஸ்டேண்ட் அருகில் இருக்கும் தன் பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனிடையே பெண்ணை காணாமல், அவர்கள் வீட்டில் தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


அந்த புகாரின் பேரில், காதலியும் நேற்று பிற்பகல் காவல்நிலையத்திற்கு சென்றார். அப்போது, பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்க பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின் காதலியை அவர்களுடன் ஒப்படைத்துவிட்டு தன் பெரியம்மா வீட்டுக்கு மகேந்திரன் வந்துவிட்டார்.

ஆனால் நேற்று மாலை முதல் மகேந்திரனை காணவில்லை. இதனால் உறவினர்கள் பதட்டமடைந்து பல இடங்களில் தேடினர். இந்நிலையில் இன்று காலை சங்கரன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலையின் பின்புறம் உள்ள கிடங்கு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மகேந்திரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பெண்ணின் உறவினர்கள்தான் மகேந்திரனை கடத்திச் சென்று கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மகேந்திரனின் உறவினர்கள், பெண் வீட்டில் போனில் மிரட்டினர், அதன் பின்பு தான் மகேந்திரன் இறந்துள்ளான், இதனால் இது கொலை தான் என்று கூறி வருகின்றனர்.