கொரோனாவை விட கொடியது: ஏற்படவுள்ள பேராபத்து!

1033

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று பரவுவதாக அந்நாட்டில் வாழும் சீன குடிமக்களை சீனா எச்சரித்துள்ளது. பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாத்திரம் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நோயின் இறப்பு விகிதம் கொரோனாவை விட அதிகமாக உள்ளது என்றும் கஜகஸ்தானின் சுகாதாரத் துறை இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்வதகாவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர் நுரையீரல் அழற்சி நோயால் (நிமோனியா) நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும் போது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.


இந்த தொற்று அதிகரித்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சீன தூதரகம் அதன் சமூக வலைத்தளத்தில் இந்த நிமோனியா குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், மக்கள் அறியப்படாத நிமோனியா பற்றி சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.