தருமபுரி….
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் (70), இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலத்தை அனைவருக்கும் சொத்தை சமமாக பிரித்து தர வேண்டும் என எண்ணியுள்ளார்.
இதில் கடைசி இரண்டு மகள்களும் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என தெரிவித்துள்ளனர். மூத்த மகளான வாசுகிக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். மூத்த மகளுக்கு சொத்தின் ஒரு பகுதியை தரவேண்டுமென என்னிய கோபால் தன்னுடைய மகன் முருகேசனிடம் இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.
இதனை மறுத்த முருகேசனுக்கும் தந்தை கோபாலுக்கும் கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பாக அரூர் காவல் நிலையத்தில் தந்தை கோபால் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோபால் வீட்டிற்கு வந்த முருகேசன் சொத்து குறித்தும், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது குறித்தும் பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றவே முருசேகன் வீட்டின் அருகில் இந்த இரும்பு ராடால் தந்தை கோபாலை அடித்து கொலை செய்துள்ளார்.
அதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை செய்யப்பட்ட கோபாலின் சடலத்தை அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முருகேசன் தலைமறைவாக உள்ள நிலையில் அரூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து முருகேசனை தேடி வருகின்றனர். பெற்ற மகனே சொத்திற்க்காக தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.