அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்… இருந்தாலும்? முதல் சீன கொரோனா ஆய்வாளர் வெளியிடும் திடுக்கிடவைக்கும் தகவல்!

668

சீனா, கொரோனா பரவல் குறித்து மறைத்தது உண்மைதான், இதை வெளியில் சொல்வதற்காக அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும் என்கிறார் கொரோனா குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல் சீன அறிவியலாளர்களில் ஒருவரான ஒரு பெண். அவர் ஹொங்ஹொங் பல்கலைக்கழக வைராலஜி துறை நிபுணரான Dr. Li-Meng Yan.

உலகம் கொரோனாவைப் பற்றி பேசுவதற்கு மிக நீண்ட காலம் முன்பே, அதாவது 2019 டிசம்பரிலேயே, அந்த வைரஸிற்கு கொரோனா வைரஸ் என பெயரிடப்படும் முன்பே, சீனாவில் ஒரு இடத்தில் பலருக்கு ஏற்பட்டுள்ள SARS போன்ற ஒரு நோய்த்தொற்று குறித்து ஆராயுமாறு Yanஇன் மூத்த அறிவியலாளரான Dr. Leo Poon கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது சக மருத்துவர் ஒருவருடன் இது தொடர்பாக Yan பேசியபோது, அப்போதே அவர் வுஹானில் ஏற்பட்டுள்ள தொற்று குறித்து அவர் தெரிவித்துள்ளார். இருவரும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதியே, அந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பது குறித்தும் பேசியுள்ளார்கள்.

அதற்கு பிறகுதான் சீனாவும், உலக சுகாதார அமைப்பும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜனவரி 9ஆம் திகதி, உலக சுகாதார அமைப்பு கொரோனா மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கை வெளியானதும், கொரோனா குறித்து Yanஇடம் விவாதித்த அனைவரும் சட்டென அமைதியாகிவிட்டிருக்கிறார்கள், அத்துடன் Yanஐயும் இது குறித்து பேசவேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பயங்கரமாக பரவுவது உண்மைதான் என்பதை Yanஇன் மூத்த மருத்துவர்கள் சிலர் ஒப்புக்கொண்டாலும், அது குறித்து பேசவேண்டாம், சிவப்புக் கோட்டைத் தொடவேண்டாம் என அவரை எச்சரித்துள்ளார்கள்.

நமக்கு பிரச்சினை பண்ணுவார்கள், நாம் காணாமல் போய் விடுவோம் என எச்சரித்துள்ளார் Yanஇன் மூத்த மருத்துவர். அவர்கள் நடந்து கொண்ட விதத்தால் ஏமாற்றமடைந்தாலும், அது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்.

காரணம், சீனாவில் இதுபோன்று உண்மைகளை வெளியிடுவோருக்கு என்ன ஆகும் என்பது தனக்கு நன்றாக தெரியும் என்கிறார் அவர். அதை ஒப்புக்கொண்டாலும், தவறான தகவல்கள் உலகத்தில் பரவ அனுமதிக்கக்கூடாது என முடிவு செய்தேன் என்கிறார் Yan. தற்போது அமெரிக்காவில் தலைமறைவாக இருக்கும் Yan, தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என் அஞ்சி இருக்கிறார்.

அத்துடன் சீனாவிலிருக்கும் தனது குடும்பம் குறித்தும் அச்சப்படுகிறார் அவர். இதற்கிடையில், ஹொங்ஹொங் பல்கலைக்கழகம், Yan பெயரையே தங்கள் இணையதளத்திலிருந்து அகற்றிவிட்டதோடு, அவர் இனி தங்கள் பல்கலைக்கழக ஊழியர் இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டுவிட்டது.

அதேபோல் அமெரிக்காவிலிருக்கும் சீன தூதரகமும் தங்களுக்கு Yan யாரென்று தெரியாதென்றும், தங்கள் நாடு கொரோனாவை சிறப்பாக கையாண்டதாகவும் கூறிவருகிறது. இதுபோக, Yan ஒரு பைத்தியம் என்ற அளவில் மட்டமாக அவர் மீது சைபர் தாக்குதல்களும் தொடகின்றன. Yan, Fox News தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில், வெளிப்படையாக அவர் கூறியுள்ள பல திடுக்கிடும் உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.