தாய்ப்பால் கொடுக்கும் போது அசந்து தூங்கியதால் நடந்த விபரீதம்! பிரித்தானியாவில் நடந்த துயரம்!!

979

பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Cardiff நகரை சேர்ந்த தம்பதி Philippa Atkins(34)-James Atkins(35). இந்த தம்பதிக்கு சமீபத்தில் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு Luna Atkins என்று பெற்றோர் பெயர் வைத்திருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், குழந்தைக்கு Philippa Atkins தாய்ப்பால் கொடுத்துள்ளார். அதன் பின் சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்துள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Philippa Atkins ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவ தினத்தன்று இவர் குழந்தையான Luna Atkins-க்கு இரவு 9.30 மணிக்கு தாய்ப்பால் கொடுக்க துவங்கிய நிலையில், இவர் மற்றும் கணவர் ஆழ்ந்து உறங்கியுள்ளனர். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்து Philippa Atkins கண் விழித்து பார்த்த போது, Luna Atkins-யிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, உடனடியாக மருத்துவர்களிடம் கொண்டு செல்லப்பட, அவர் 50 நிமிடங்கள் கழித்து உயிரிழந்தார். கடந்த மே மாதம் 9-ஆம் திகதி 37 வாரங்களில் அவசர சிகிச்சை பிரிவில் Luna Atkins பிறந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை 5 மணியளவில் கார்டிப் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதன் பின்னரே இந்த சம்பவம் நடந்துள்ளது.


இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 9.30 மணியளவில் Luna Atkins-வுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்ட போது பெற்றோர் இருவரும் தூங்கிவிட்டார்கள். மே 12-ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் தாயார் கணவிழித்துள்ளார். ஆனால் குழந்தையிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.

அதன் பின் 2.20 மணிக்கு குழந்தை இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில்,மரணத்திற்கான காரணம் நிச்சயமற்றது என்று பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான இறுதி விசாரணை, அடுத்த ஆண்டு ஜுலை 27-ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் இழப்பால் தவிக்கும் தாய் Philippa Atkins, மற்ற குழந்தைகளுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.

எங்களுடைய மகள் எனக்கு கற்றுக் கொடுத்தது வாழ்க்கை மிகவும் குறுகியது, மிகவும் விலைமதிப்பற்றது. உலகத்தை அதிக இசையுடனும், மகிழ்ச்சியுடனும் நிரப்ப நாம் அவளுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். உங்களால் முடியாது என்று நீங்கள் எப்போதாவது நினைத்தால், சந்திரனைப் பாருங்கள். உலகம் நன்றாக இருப்பது தெரியும்.

நான் என் குழந்தையை ஒன்பது மாதங்களுக்கு சுமந்து செல்ல வேண்டியிருந்தது, அவளை கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வைத்திருந்தேன். என் மகளை நான் அறிந்தேன், அவள் நல்லவள். என்னை நம்புவதற்கும், உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கும் அவள் எனக்கு பலம் அளித்துள்ளாள் என்று தெரிவித்துள்ளார்.