தமிழகத்தில் திருமணமான 41 வயது நபர் உண்மையை மறைத்து 24 வயது பெண்ணை காதலித்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைபடங்கை காண்பித்து மிரட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது. 41 வயதான இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
திருமணமான இவர் மனைவி, குழந்தைகளை சொந்த ஊரான சென்னிமலையில் விட்டுவிட்டு, திருப்பூர் எம்.எஸ்.நகரில் தங்கிய படி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், பனியன் கம்பெனியில் அவருடன் வேலை பார்த்து வந்த 24 வயதுப் பெண் ஒருவர் மீது மாதுவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது மாது அந்த பெண்ணிடம் எனக்கு திருமணம் ஆகிவிட்டது, உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மாது வீசிய காதல் வலையில் வீழ்ந்த அந்த பெண், அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதை எல்லாம் மாது ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் மாதுவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த பெண், இவருடன் சண்டை போட்டு பிரிய முற்பட்டுள்ளார்.
அப்போது மாது, தான் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை காண்பித்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் தான், குறித்த பெண்ணுக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுக, உடனே பெண் வீட்டார், மாது வீட்டிற்குச் சென்று, அவர் போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்துள்ளனர்.
இருப்பினும் எப்படியோ, மாது அந்த ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை மணமகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் அதைப் பதிவேற்றியிருக்கிறார்.
திருமணத்திற்கு ஒருவாரம் மட்டுமே இருந்த சூழலில், இந்த விவகாரத்தால் திருமணம் நின்று போனது. இதனால் மன உளைச்சல் அடைந்த பெண் வீட்டார் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் மாதுவை கைது செய்த பொலிசார், அவரிடமிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், மாதுவை நேரில் சந்தித்து அவருடைய போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெண்ணின் பெற்றோர்கள் அழித்திருக்கின்றனர். ஆனால், அந்தப் படங்கள், வீடியோக்களை மாது கூகுள் டிரைவில் சேமித்து வைத்திருக்கிறார். தன்னைவிட்டு அந்தப் பெண் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த வீடியோவை மணமகனுக்கு அனுப்பியிருக்கிறார். மாதுவின் மெயில், சமூக வலைதள பக்கங்களை முடக்கி, அதிலிருந்த தகவல்களை சைபர் கிரைம் பொலிசார் அழித்திருக்கின்றனர்.
அவருடைய போனில் வேறு பெண்களுடன் இருந்தது மாதிரியான வீடியோக்கள் எதுவுமில்லை. விசாரணையில்தான் வேறு எந்தப் பெண்களாவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.