இஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா? அலட்சியம் வேண்டாம்…!

1050



இஞ்சி அதன் மருத்துவ குணங்களுக்காக பழங்காலம் முதலே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கினாலும் அதனால் சில ஆபத்தான பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இஞ்சி அதிகமாக சாப்பிடும்போது அது பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் இஞ்சியால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இஞ்சியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது இரத்த அழுத்தத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும்.


இஞ்சி அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஏனென்றால் இது குடல் வழியாக உணவு மற்றும் மலம் செல்வதை துரிதப்படுத்துகிறது.

உங்களுக்கு இரத்தப்போக்கு இருக்கும்போது இஞ்சி சாப்பிடுவது அதனை அதிகரிக்கிறது. இது இஞ்சிக்கு மட்டுமல்ல, அது சேர்க்கப்பட்டுள்ள உணவிற்கும் இது பொருந்தும். சில ஊட்டச்சத்து நிபுணர்கள் இஞ்சி அதன் ஆன்டிபிளேட்லெட் (இரத்த மெலிதல்) பண்புகள் காரணமாக இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர்.

கிராம்பு, பூண்டு, ஜின்ஸெங் மற்றும் சிவப்பு க்ளோவர் போன்ற பிற மூலிகைகளுடன் எடுத்துச் செல்லும்போது, ஜின்ஸெங் அதிகப்படியான இரத்தப்போக்கு அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.

இஞ்சி பொதுவாக நீரிழிவு சிகிச்சைக்கு உதவும் என்று அறியப்படுகிறது. ஆனால் சர்க்கரை நோய்க்காக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இது மருந்துகளின் விளைவுகளை மேம்படுத்தலாம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது இரத்த சர்க்கரையை அதிகமாகக் குறைக்கலாம். இஞ்சி டீ சிறிய அளவில் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இது பெரும்பாலும் மேல் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் வாயுக்கோளாறு ஏற்படுகிறது.

இஞ்சிக்கு பதிலாக வேறு பொருட்களை செரிமானத்திற்கு பயன்படுத்துவது இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

வாயுக்கோளாறு இருக்கும்போது இஞ்சி சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது வீக்கத்தை ஏற்படுத்தும்.