தமிழகத்தில் தன்னுடன் ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி உள்ள நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த ரத்த காயத்துடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்த விசாரணையில் உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் செல்வி (55) என்பது தெரிந்தது.
அவர் வேளச்சேரி அண்ணா நகர் 5-வது மெயின் சாலையில் நடைபாதையில் வசித்து வந்தார். அவருடன் கும்பகோணத்தை சேர்ந்த பரணிதரன் (40) என்பவரும் உடன் தங்கி இருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் கணவன்-மனைவி போல நடைபாதையில் ஒன்றாக தங்கி, வேளச்சேரி பகுதியில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தது தெரிந்தது. அதே பகுதியில் சுற்றிதிரிந்த பரணிதரனை பொலிசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 5 ஆண்டுகளாக செல்வியும், நானும் கணவன்-மனைவியாக வசித்து வந்தோம். பல நேரங்களில் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக செல்வியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் இருந்தபோது என்னுடன் செல்வி வாய் தகராறில் ஈடுபட்டார். அப்போது என்னை தவறான வார்த்தைகளால் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்த கட்டையால் செல்வியின் தலையில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் பரணிதரனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.