வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம் பெண்! தூக்கில் சடலமாக தொங்கினார்: சோக சம்பவம்!!

902

ரஷ்யாவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கு திரும்பிய இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிரியா என்பவர் ரஷ்யாவில், மருத்து படிப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு, அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கேரளாவில், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தடுவது கட்டாயம் என்பதால், குறித்த பெண்ணும் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

அதன் படி உறவினர் ஒருவரின் வீட்டில் கிருஷ்ணப்பிரியாவுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 13-ஆம் திகதி குடும்பத்தினர் கிருஷ்ணப்பிரியாவுக்கு போன் செய்துள்ளனர்.


ஆனால், எந்த ஒரு பதிலும் இல்லாததால், அண்டை வீட்டாரை அழைத்து, சென்று பார்க்கும் படி கூறியுள்ளனர். ஆனால் வீட்டின் கதவை அவர் திறக்காததால், ஜன்னலை உடைத்து பார்த்த போது, கிருஷ்ணப்பிரியா தூக்கில் தொங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இது குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணப்பிரியாவிடம் இருந்து, கொரோனா பரிசோதனை செய்வதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் முடிவுகள் வரவில்லை, இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணப்பிரியா தங்கியிருந்த வீட்டிற்கு விரைந்த பொலிசார் அவரின் மொபைல் போன், லேப்டாப் போன்றவைகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கிருஷ்ணப்பிரியா மன அழுத்தம் காரணமாக ஏதேனும் செய்திருக்கலாமா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.