தனது வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் மன்னார்குடி ராஜகோபலசுவாமி கோவில் யானை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கோவில் யானை செங்கமலத்தின் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், பாப்-கட் செங்கமலத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். மன்னார்குடி ராஜாகோபல சுவாமி கோவிலுக்கு வந்தால் பாப்-கட் செங்கமலத்தை பார்க்கலாம்“ என்றுள்ளார்.
இந்நிலையில், மன்னார்குடி கோவிலுக்கு வருபவர்கள் யானை செங்கமலத்தின் ஹேர்ஸ்டைலுக்காகவே சற்று நேரம் அதனுடன் செலவிட்டு வருகின்றனர். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.