வீட்டையே கேமராவாக மாற்றிய புகைப்பட கலைஞர்.. மகன்களுக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?

1094

பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் புகைப்படம் எடுப்பது தான். தற்போது ஸ்மார்ட்போன்களால் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டாலும், கேமராவில் எடுக்கும் புகைப்படத்திற்கு ஈடு இணையே இல்லை.

இந்நிலையில், கர்நாடகாவில் இருக்கும் பெலகவி சிட்டியில் வசிக்கும் ரவி ஹோங்கல்(49) என்பவர் தன்னுடைய வீட்டையே கேமரா போன்றே வடிவமைத்து அசத்தியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், கடந்த 33 ஆண்டுகளாக புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார் என்பதை தெரிவித்தார்.

ஃபோட்டோகிராஃபி மீது இருக்கும் ப்ரியம் அங்குள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் இறுதி வேலைகள் தற்போது தான் முடிவுக்கு வந்த நிலையில் அந்த வீட்டின் முகப்பு கேமராவை போலவே இருக்கிறது.

அதனை பார்க்கும் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவது மட்டுமில்லாமல் புகைப்படங்கள் எடுத்தும் செல்ஃபி எடுத்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், எனக்கு ஃபோட்டோகிராஃபி என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், ஆனால் கடந்த காலங்களில் அனைத்தும் மாறிவிட்டது.

ஆனால் எனக்கு புகைப்படம் எடுப்பதன் மீதான பற்று மட்டும் குறையவே இல்லை என்று கூறுகிறார். தன்னுடைய வாழ்நாளில் கேமராவைப் போன்றே ஒரு வீட்டினை கட்ட வேண்டும் என்பது கனவு


ஆனால் அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது தான் தெரியவில்லை என்று கூறுகிறார் அவர். தற்போது, பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு தன்னுடைய கனவை தற்போது நிறைவேற்றியுள்ளார் அவர்.

மேலும், ஹோங்கல் இது குறித்து பேசும் போது, தங்கள் வீடுகளை கட்டித் தந்த கீ கான்செப்ட்ஸ் இண்டெரீயர் நிறுவனத்திற்கு நன்றி கூறியுள்ளார். வீட்டின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டிலும் கேமராக்களின் வடிவமைத்தை கொண்டுவந்ததற்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

கெனான், நிக்கான், மற்றும் எப்ஸான் என்று மூன்று கேமரா ப்ராண்டுகளின் பெயர்கள் வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. அது கேமரா மீது மட்டும் உள்ள காதல் இல்லை. மாறாக, அவை ஹோங்கலின் மூன்று ஆண் குழந்தைகளின் பெயர்களாகும்.

பால்கனியில் ரீல் மற்றும் பெரிய ஃப்ளாஷ் ஆகியவற்றை வடிவமைத்துள்ளனர். அதில் லென்ஸ் மற்றும் ஹூட் ஆகியவையும் பதிக்கப்பட்டு வீட்டின் வெளியே நடப்பதை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெமரி கார்ட், ரோல் ஃப்லிம், கேமரா ஷட்டர் ஆகியவற்றை மெய்ன் கேட்டிலும் பொருத்தியுள்ளனர்.

என்னுடைய தேவைகள் மற்றும் ஐடியாக்களை இம்ப்ளிமெண்ட் செய்வதில் சவால்கள் இருந்தன. இருப்பினும் லென்ஸ், லென்ஸ்ஹூட் மற்றும் கேமரா ஃப்லிம்ஸ் ஆகியவற்றை என்னுடைய டிசைனில் கொடுத்தேன் சில விசயங்களை எளிமையாக நிறைவேற்றிவிட்டோம்.

ஆனால் சில டிசைன்களுக்கு நேரம் அதிகம் எடுத்துள்ளது. என்னுடைய ஐடியாக்களை நிறைவேற்ற நான் அவர்களுக்கு உதவினேன். இரண்டு வருடங்கள் கழித்து என்னுடைய கனவு நினைவாகியுள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளையும் தன் மகன்களான கெனான், நிக்கான், மற்றும் எப்சான் ஆகியோருக்கு கொடுத்துள்ளார். கேமரா பெயர்களை தன்னுடைய மகன்களுக்கு வைத்தது குறித்து அவர்களுக்கு வருத்தம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்ட போது, அப்படியேதும் இல்லை.

ஆரம்பத்தில் அவர்களின் பெயர்களுக்கான அர்த்தம் என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நான் அதிகம் நேசித்த விசயங்களை தான் பெயராக வைத்தேன் என்று கூறும் போது அதை நினைத்து தற்போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.