7 தமிழர்கள் விடுதலை தொடர்பில் முடிவு எடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும்? உயர்நீதிமன்றம் அதிரடி!!

705

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. 7பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என அதிரடியாக கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்