வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை… சீரழித்து, நிர்வாண வீடியோ எடுத்து இளைஞர்கள் செய்த மோசமான செயல்!

1048

தமிழகத்தில் வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்மணி தனது குடும்ப செலவுக்காக பள்ளிபாளையம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரிடம் கடந்த 2009-ம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார்.

இதற்கான வட்டித் தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்துள்ளார். அதன் படி கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் திகதி வட்டித் தொகையை அந்த பெண், தன்னுடைய 19 வயது மகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

நிதி நிறுவனத்திற்கு சென்ற அப்பெண்ணை நிதிநிறுவன அதிபர் சிவகுமாரும், அவரது நண்பர் ரவி ஆகியோர் வன்கொடுமை செய்து அப்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.


இதையடுத்து அந்த பெண் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி பொலிசுக்கு மாற்றப்பட்டு வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நடைபெற்ற போது வழக்கில் 2-ஆம் குற்றவாளியான ரவி உயிரிழந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் நிதி நிறுவன அதிபருக்கு சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.