காதலனை காணவில்லை… தகவல் வெளியிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

546

அமெரிக்க இளம்பெண்..

அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நிலையில், திடீரென தனது காதலனைக் காணவில்லை என முகநூலில் தகவல் வெலியிட்டு அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் காதலனுக்கு ஏற்கனவே இன்னொரு குடும் இருப்பது தெரியவர அந்தப்பெண் பெரும் அதிச்சியடைந்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள Norwichஐ சேர்ந்த Paul McGee (40), சீனாவிலுள்ள Shenzhenஇல் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் பிறந்த Rachel Watersஎன்ற பெண்ணை சந்தித்திருக்கிறார்.

இருவரும் காதலர்களாக பழகியிருக்கிறார்கள். இந்நிலையில், ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் சென்று வருவதாகக் கூறி paul பிரித்தானியா புறப்பட்டிருக்கிறார் . அங்கு போனவரிடம் இருந்து ரேச்சலுக்கு எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் 6 வாரங்கள் கடந்தும் எந்த தகவலும் வராததால், Norfolk நகர பேஸ்புக் பக்கம் ஒன்றில் ஒரு செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார் ரேச்சல்.


அதில், தான் சீனாவில் வாழ்வதாகவும், தன் காதலரான பால் சொந்த ஊருக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றதாகவும், அவர் தற்சமயம் சீனா திரும்பியிருக்கவேண்டும், ஆனால் இதுவரை அவர் வரவில்லை, என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, எனக்குக் கவலையாக இருக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த செய்தியைக் கண்ட paul தோழி ஒருவர், பாலுக்கு ஏற்கனவே மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்றும், தான் ரேச்சலுக்காக வருந்துவதாகவும் ஒரு பதில் செய்தியை பதிவு செய்ததுடன், அடடா, paulக்கு சீனாவிலும் ஒரு காதலி இருக்கிறார் போலிருக்கிறதே என கிண்டலாக ஒரு செய்தியும் தெரிவித்திருக்கிறார் அவர்.

இதனையடுத்து அந்த செய்தியை கண்ட ரேச்சல், அதிர்ர்சியடைந்து உடனடியாக தனது செய்தியை பேஸ்புக்கிலிருந்து அகற்றிவிட்டாராம். நடந்தது என்னவென்றால் 2 ஆண்டுகளாக தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார் paul. 2 ஆண்டுகளுக்குப் பின் அவர் சொந்த ஊருக்கு வந்த வேளையில்இருவரும் சந்தித்துக்கொள்ள, மீண்டும் இணைந்து வாழ்வது என முடிவு செய்து இணந்துவிட்டார்களாம். இதில் ரேச்சலின் நிலைமைதான் மிகவும் பரிதாபமாகிவிட்டது.