வேலூர்..
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தொட்டி துறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது வீட்டருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நிஷா (21) என்ற மகள் உள்ளார். நிஷா டிப்ளமோ படித்து விட்டு சென்னை அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார். மேலும், மதுரவாயல் லட்சுமி நகரில் தனது தோழியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத் தீ!
இந்தநிலையில், கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவில் நிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக வீட்டு உரிமையாளர் வெங்கடேசனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதை கேட்டு பேரதிர்ச்சி அடைந்த வெங்கடேஷன் குடும்பத்துடன் கிளம்பி மதுரவாயலுக்கு வந்தார். பின்னர் நிஷாவின் தோழியிடம் நடந்தவற்றை குறித்து விசாரித்தனர்.
அதில், சம்பவத்தன்று இரவு நீண்ட நேரம் நிஷா போனில் பேசி கொண்டிருந்தாள்… தூக்கம் வரவே நான் அறைக்கு சென்றுவிட்டேன்… காலியில் எழுந்து பார்த்தபோதுதான் சமையலறையில் நிஷா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார் என்றும் எனக்கு வேறெதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்… அதனையடுத்து, வெங்கடேசன் மதுரவாயல்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், எனது மகள் நள்ளிரவு 3 மணி அளவில் தூக்குபோட்டுக்கொண்டதை செல்போனில் படம் பிடித்துள்ளார்… தற்கொலைக்கு முன்னர் ஒரு ஆணுடன் நீண்ட நேரம் பேசியிருப்பது பதிவியாகியுள்ளது… ஆகையால், காதல் விவகாரத்தில் எனது மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம், எனவே உரிய விசாரணை நடத்தி மகளின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு வெங்கடேசன் அதில் கூறியுள்ளார்.
வழக்கு பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார் நிஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.