பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை: வெளியான வீடியோ காட்சிகள்!!

899

பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தஹிர் அஹ்மத் நசீருக்கு எதிராக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதாவது, தஹிர் தன்னை முகமது நபி என்று கூறி வந்ததால் தெய்வநிந்தனை வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நேற்று பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போதே தஹிர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


சுட்டுத்தள்ளிய நபர், தஹிரை இஸ்லாத்தின் எதிரி என கோபமாக கத்திக் கொண்டே கொன்றுள்ளார்.

அவரது பெயர் காலித் என தெரியவந்துள்ளது, அந்த இடத்திலேயே கைதும் செய்யப்பட்டார். குறித்த நபர் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை கொண்டு வந்தது எப்படி என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.