லண்டன் பேருந்துகளில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர்கள்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்: எச்சரிக்கை தகவல்!!

1007

லண்டனில் பேருந்துகளில் பாலியன் சீண்டல் தொடர்பாக ஆறு பேரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டு மக்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுலை 4 முதல் 2020-ஆம் ஆண்டு ஜுன் 1-ஆம் திகதி வரை பேருந்துகளில், சில ஆண்கள் மிகவும் மோசமாக ( sexual touching) நடந்து கொண்டுள்ளனர். இது நகர் முழுவதும் நடந்துள்ளது.

இதனால்,சாலை போக்குவரத்து பொலிஸ் கட்டளை துப்பறியும் ஆய்வாளர் Cindy Yau, லண்டனில் பேருந்துகளில் பாலியல் தாக்குதல்கள் மிகவும் அரிதான நிகழ்வு, அவை நிகழும்போது, ​​இந்த விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

எங்களுக்கு கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப தகவல்கள் வலுவானது. இந்த வகையான தாக்குதலுக்குள்ளானவர்களோ அல்லது சாட்சியாக இருக்கும் நபர்களோ என யாராக இருந்தாலும், அவர்கள் பொலிசாரிடம் வந்து தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம். நிச்சயமாக இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.


மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்: நபர் D, நபர் B, நபர் C, (கீழ் வலது) நபர் E, நபர் F, நபர் A (Picture: Met Police)
அதன் படி ஆறு ஆண்களின்(ஆங்கிலத்தில் A முதல் f வரை குறிப்பிட்டு) புகைப்படங்களை குறிப்பிட்டு பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், மார்ச் 11-ஆம் திகதி அன்று இரவு 10.50 மணிக்கு ஆர்கேடியன் கார்டனில் பேருந்து எண் 141-ல் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பான நபர் A என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த படியாக ,பிப்ரவரி 4-ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் இரவு 9.45 மணி வரை பேருந்து எண் 492-ல் கண்ட இடங்களில் தொட்டதாக(sexual touching) நபர் B குறிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு ரூட் 230 பேருந்தில் C நபரும், ஜூலை 4, 2019 அன்று இரவு 10.30 மணிக்கு லண்டன் பிரிட்ஜ் மற்றும் கிளாப்டன் இடையே பேருந்து எண் 48-ல் D நபரும், விக்டோரியா சாலை, விக்டோரியா தெரு, மற்றும் சோஹோவில் உள்ள செயின்ட் அன்னேஸ் நீதிமன்றம் ஆகியவற்றில் மூன்று தனித்தனியான மோசமான சம்பவங்களுக்கு E நபரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, ஜூன் 1-ஆம் திகதி காலை 10 மணிக்கு நார்தம்பர்லேண்ட் பூங்காவின் சைன்ஸ்பரி அருகே ஒரு பேருந்து நிறுத்தத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக F நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நபர்களை பற்றி மக்கள் யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.