தொடர்ந்து எச்சரிக்கும் அரசு… மறைக்கப்பட்ட மர்ம தீவில் நடந்த விபரீதங்கள் : நெஞ்சை உறையவைக்கும் வரலாறு!!

502

இத்தாலி..

இத்தாலி நாட்டில் உள்ள தீவு ஒன்றிற்கு செல்லும் மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது அந்நாட்டு அரசு. அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற விபரீதங்கள் தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

போவெக்லியா என்ற தனிமையான தீவு வெனிஸ் மற்றும் லிடோ இடையே அமைந்துள்ளது. பிரம்மாண்ட கட்டிடங்கள், இயற்கை எழில் சூழ்ந்த நிலப்பரப்பு, கண்ணை கவரும் கடற்கரை என பல பிரத்தியேக அம்சங்கள் இருந்தாலும் இந்த தீவில் மக்கள் யாரும் வசிப்பதில்லை.

சொல்லப்போனால், இந்த தீவுக்கு செல்ல அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் அனுமதியும் பெற்றுவிட முடியாது. வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே இங்கே செல்ல முடியும். கலையும் நாகரிகமும் செழித்து வளர்ந்த இத்தாலியில் இப்படி ஒரு தீவு உருவாக்கப்பட்டது ஏன்? பின்னர் எதற்காக இது கைவிடப்பட்டது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.


பிளேக் நோய் உலக அளவில் மிகப்பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய பெரும் தொற்றாகும். 1920 களில் ஐரோப்பாவில் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தீவில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டனர். இதன்மூலம் இந்த தீவில் ஏற்கனவே வசித்துவந்தவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். அதனை தொடர்ந்து, இந்த தீவு நோயாளிகளை இறக்கிவிடும் இடமாகவே இருந்திருக்கிறது.

அப்படி இந்த தீவுக்கு வந்தவர்கள் அனைவரும் அங்கேயே மரணமடையவே, பிரம்மாண்ட குழிகளில் அவர்களது உடல் ஆங்காங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கொடும் தொற்று நோயான பிளேக் உலகம் முழுவதும் முடிவுக்கு வந்ததற்கு பிறகும் இந்த தீவுகளுக்கு மக்களை அனுப்பியது ஐரோப்பிய நாடுகள்.

பிளேக் நோய்த் தொற்று முடிவுக்கு வந்ததும், இந்த தீவில் மனநல மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அப்போது ஐரோப்பாவில் சிறிய உடல் நலக்குறைபாடோடு யார் இருந்தாலும் அவர்களை உடனடியாக இந்த தீவுக்கு அனுப்பிவிட முடிவெடுத்திருக்கின்றன பல நாடுகள். இப்படி தீவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீது பல விபரீதமான பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இன்றைய தேதியில் இந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இத்தாலி சுற்றுலாத்துறை இந்த தீவுக்கு மக்களை அனுப்ப தயக்கம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த தீவுக்கு செல்ல அனுமதி கிடைக்கிறது.

பொதுமக்கள் யாராவது இந்த தீவுக்கு செல்ல நினைத்தால் அதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுல்லாமல் இங்கு செல்ல கட்டணமும் கணிசமான அளவில் வசூலிக்கப்படுகிறது.