உணவகத்தில் சாப்பிட்ட குழந்தை இறப்பு: ஒரே நாளில் 800 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

986

ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு வெளியே உணவம் ஒன்றில் சாப்பிட்ட பின்னர் ஒரு குழந்தை இறந்துவிட்ட நிலையில் 800 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

குறித்த உணவகமானது குறைந்த விலையில் மாமிச உணவு ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொளுத்தும் வெயில் காலம் என தெரிந்தும் அந்த உணவகம் உரிய முறையில் மாமிசங்களை பராமரிக்க தவறிவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அந்த உணவை உண்டு நோய்வாய்ப்பட்ட 826 பேர்களில் 5 வயது சிறுவனும் ஒருவர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்களால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை எனவும்,

பிரின்ஸ் ஹுசைன் மருத்துவமனையின் இயக்குநர் முகமது ஆபேத் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நிலவரப்படி நான்கு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் எனவும், 321 பேர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் சாத் ஜாபர் தெரிவித்துள்ளார்.