வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த 19 வயது இளம் பெண்! அடுத்த மூன்றே மாதத்தில் எடுத்த விபரீத முடிவு!!

922

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் 3 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரகுமார்-சத்தியவாணி. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளான தீபிகா(19), அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் தீபிகாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் கண்டித்த நிலையில், கடந்த மே மாதம் 18-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய இவர் வீடு திரும்பவே இல்லை.

இதையடுத்து தீபிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, தனது காதலர் பிரசாந்த் உடன் இருப்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, இவர்கள் கடந்த 9-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இருவரும் திருமண வயது நிரம்பியவர்கள் என்பதால் தீபிகாவை பிரசாந்த் உடன் அனுப்பி வைத்துள்ளனர். திருமணத்திற்கு பெற்றோர் செய்ய வைத்திருந்த நகையை வாங்கி வருமாறு பிரசாந்தின் தாயார் தீபிகாவிடம் கூறியுள்ளார்.


தீபிகாவும் தனது தாயார் வீட்டுக்கு சென்று நகையை கேட்டுள்ளார். ஆனால், தங்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் மீது கோபத்தில் இருந்த பெற்றோர், வேறு வழியின்றி நகையை கொஞ்சநாள் கழித்து தருவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து ஆடி மாதத்தை ஒட்டி கடந்த 20-ஆம் திகதி தீபிகா தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

காதல் கணவரின் நடவடிக்கை சரியில்லை என்றும், மாமியார் நகை கேட்டு நச்சரிப்பதாகவும் தாயிடம் கூறி அழுதுள்ளார். ஆடி மாதம் முடிந்து செல்லும்போது நகை போட்டு அனுப்புவதாகக்கூறி அவரது தாயார் சமாதானம் செய்துள்ளார்.

மேலும், நீயே விரும்பி தேர்வு செய்து கொண்ட வாழ்க்கை, பிரச்னைகளை நீதான் சமாளித்து வாழவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர். வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த தீபிகா மதியம் 3 மணி வரை சாப்பிட வராதால் அவரது தயார் அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது தீபிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். உடலை இறக்கிய பெற்றோர், பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.