விவாகரத்திற்கு பின் டிக்டாக் வீடியோ…. இளம்பெண்ணை கொலை செய்த முன்னாள் கணவர் : அடுத்த நிகழ்ந்த விபரீதம்!!

557

பாகிஸ்தான்….

அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் விவாகரத்துக்கு பின் வெளியிட்ட டிக்டாக் வீடியோவால் கோபமடைந்த முன்னாள் கணவர், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் சானியா கான்(29). புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த இவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது(36) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

ஐந்து ஆண்டுகள் டேட்டிங் செய்த இந்த ஜோடி, காதல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு குடிபெயர்ந்தது. அதன் பின்னர் சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.


அதனைத் தொடர்ந்து சானியா கான் சிகாகோவிலும், ரஹீல் ஜார்ஜியாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சானியா வீடியோ ஒன்றை டிக்டாக்கில் பதிவிட்டார்.

அத்துடன் தனது திருமண வாழ்க்கையில் கசப்பான நினைவுகள் இருந்ததாகவும், விவகாரத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது ரஹீலுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் காரை எடுத்துக் கொண்டு, சுமார் 1,100 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து சிகாகோவிற்கு விரைந்துள்ளனர்.

அங்கு முன்னாள் மனைவி சானியாவை சந்தித்த ரஹீல், தான் கொண்டுவந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் அவரும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.