காசோலையை வீட்டிலேயே அச்சடித்து ரூ.1 கோடி மதிப்பிலான போர்ஷ் காரை வாங்கிய நபர்!!

476

அமெரிக்காவில் தனது சொந்தக் கணினியில் போலி காசோலைகளை அச்சடித்து ரூ. 1 கோடி மதிப்பிலான போர்ஷ் காரை வாங்கிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் விலையுயர்ந்த மேலும் 3 ரோலெக்ஸ் கடிகாரங்களை வாங்கிய போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

 

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 42 வயதான கேஸே வில்லியம் கெல்லி. இவர் தனது வீட்டு கணினியில் அச்சடித்த காசோலையைக் கொடுத்து சுமார் 140,000 டொலர் மதிப்பிலான புதிய போர்ஷ் 911 காரை ஜூலை 27ஆம் திகதி வாங்கியிருக்கிறார்.

அவர் கொடுத்த காசோலை போலியானது என கண்டுபிடித்த நிலையில் வால்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மட்டுமின்றி அந்த போர்ஷ் கார் திருடப்பட்டது எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் அத்துடன் அந்த நின்றுவிடவில்லை, போலி காசோலையில் காரை வாங்கிய ஒருநாள் கழித்து, கெல்லி மற்றொரு போலி காசோலையைக் கொடுத்து மூன்று ரோலெக்ஸ் கடிகாரங்களை வாங்கியுள்ளார்.

கடிகாரங்களை விற்பனை செய்த நிறுவனமே, அந்த காசோலைகள் போலி என கண்டறிந்து ஷெரிப் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர். இதனிடையே கார் விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கெல்லி,

ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் காரின் அருகில் நின்று போஸ் கொடுப்பதை பொலிசார் படமெடுத்து வெளியிட்டனர்.

அவர்மீது தற்போது வழக்குபதிவு செய்து அவரிடமிருந்து பல போலி காசோலைகளையும் நோட்டுகளையும் பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.