லெபனான் தலைநகரை உலுக்கிய மிகப்பெரிய குண்டுவெடிப்பில் பெய்ரூட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் குறித்த வெடிவிபத்தில் சிக்கியதாகவும், உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏதும் இல்லை எனவும் தேவையான மருத்துவ கவனிப்பைப் பெறுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிற அரசாங்க அதிகாரிகளும் அதிர்ச்சியூட்டும் இந்த துயரத்திற்கு பதிலளித்து, பாதிக்கப்பட்டவர்களில் பிரித்தானிய பிரஜைகளும் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றிரவு பெய்ரூட்டில் இருந்து வரும் படங்களும் வீடியோக்களும் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த கொடூரமான சம்பவத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் அவர்களை நினைவில் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
லெபனானின் தலைநகரில் ஒரு துறைமுக கிடங்கில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அருகில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளை அவசரகால மீட்புக்குழுவினர் சோதனையிட்டு வருவதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டிருந்ததை லெபனான் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.